நாட்டில் நிலவும் அதிக வெப்பம் : வைத்தியர்கள் எச்சரிக்கை

நாட்டில் நிலவும் அதிக வெப்பம் : வைத்தியர்கள் எச்சரிக்கை

நாட்டில் தற்போது நிலவும் அதிக வெப்பநிலை காரணமாக வெளியிடங்களுக்கு செல்வோர் மிகுந்த அவதனைத்ததுடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்

நிலவும் வெப்பமான வானிலை காரணமாக வெளியிடங்களுக்கு செல்லபவர்களுக்கு அதிக நீர்ச்சத்து இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக கொழும்பு லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்

இதனால் , அதிகளவு நீர் அல்லது இயற்கை பானங்களை பருக வேண்டுமென அவர் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளார்

இதேவேளை அதிக வெப்பநிலை நிலவும் இந்த கால கட்டத்தில் பாடசாலை விளையாட்டு விழா நடைபெறுமாயின் பாடசாலை நிர்வாகம் அது தொடர்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் இலங்கை பொது மக்கள் சுகாதார பரிசோதகர் சங்கம் வலியுறுத்தியுள்ளது

மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் வெப்பநிலையில் அதிகரித்து காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது .

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )