புதிய சாதனை நிகழ்த்தியுள்ள பாபர் அசாம்

புதிய சாதனை நிகழ்த்தியுள்ள பாபர் அசாம்

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் பாபர் அசாம் , ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்டில் மிகக் குறைந்த இன்னிங்ஸ்களில் 6,000 ஓட்டங்களை எட்டிய வேகமான வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

அவர் 126 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று 123 இன்னிங்ஸ்களில் 6,019 ஓட்டங்கள் எடுத்து, 19 சதங்களையும் 34 அரைசதங்களையும் பதிவுசெய்துள்ளார்.

கராச்சியில் நடைபெற்று வரும் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து முத்தரப்பு தொடரில், நியூசிலாந்துக்கு எதிரான பாகிஸ்தானின் இறுதிப் போட்டியின் போது பாபர் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

இந்த குறிப்பிடத்தக்க சாதனை, இவரை தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் ஹாஷிம் ஆம்லாவுடன் (Hashim Amla) இணைத்துள்ளது,

ஆம்லா 123 இன்னிங்ஸ்களில் 6,000 ஓட்டங்களை எட்டினார், இதன் மூலம் இந்த மைல்கல்லை எட்டிய வேகமான வீரர்கள் என்ற பெருமையை இருவரும் பெற்றுள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )