மகளிர் பிரீமியர் லீக் ; டெல்லியை வீழ்த்தியது பெங்களூரு

மகளிர் பிரீமியர் லீக் ; டெல்லியை வீழ்த்தியது பெங்களூரு

5 அணிகள் பங்கேற்றுள்ள 3-வது மகளிர் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்.) தொடர் குஜராத் மாநிலம் வதோதராவில் நடந்து வருகிறது.

இதில் நேற்று 4-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு- டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பெங்களூரு பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணிக்கு தொடக்க வீராங்கனைகளான மெக் லானிங் 17 ரன்களிலும், ஷபாலி வர்மா ரன் எதுவுமின்றியும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.

பின்னர் களமிறங்கிய ஜெமிமா ரோட்ரிக்ஸ் சிறிது நிலைத்து விளையாட மறுமுனையில் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன. அவரும் 34 ரன்களில் ஆட்டமிழந்தார்.

19.3 ஓவர்கள் விளையாடிய டெல்லி கேப்பிடல்ஸ் 141 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

இதனையடுத்து 142 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பெங்களூரு களமிறங்க உள்ளது.

இறுதியில் பெங்களூரு அணி 16.2 ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்து 146 ரன்கள் எடுத்தது. டெல்லி அணியின் சார்பில் அருந்ததி ரெட்டி மற்றும் ஷிகா பாண்டே ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

இதன்மூலம் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )