முதியவர்களை மகிழ்விக்க பிரத்யேக ரயில் அறிமுகம்

முதியவர்களை மகிழ்விக்க பிரத்யேக ரயில் அறிமுகம்

சீனா உலகிலேயே முதியவர்கள் அதிகம் உள்ள முதல் நாடாக உள்ளது.

தற்போது சீனாவில் உள்ள 14 மில்லியன் மக்கள் தொகையில் 5-ல் ஒருவர் 60 வயதுக்கு மேற்பட்டவராக இருக்கிறார். வருகிற 2035-ம் ஆண்டு சீனாவில் முதியவர்களின் எண்ணிக்கை 400 மில்லியனாக இருக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டில் வளர்ந்து வரும் முதியோர்களுக்கு மகிழ்ச்சி தருவது மட்டும் இல்லாமல் நாட்டை பொருளாதார வளர்ச்சிக்கு கொண்டு செல்ல சில்வர் ரெயில் என்ற பிரத்யேக சுற்றுலா ரெயிலை இயக்க சீனா முடிவு செய்துள்ளது.

இந்த சுற்றுலா ரெயில் வருகிற 11-ந்திகதி தொடங்கப்பட உள்ளது. இந்த ரெயிலில் ஆக்சிஜன் சிலிண்டர், முதலுதவி பெட்டி, அவசர அலாரம் பட்டன்கள் இருக்கை ஏற்பாடுகள் மருத்துவ வசதி, கழிப்பிட வசதி உள்ளிட்டவை என பாதுகாப்பான பயணத்தை வழங்க உள்ளது.

சீனாவில் வசிக்கும் 60 வயதுக்கு மேற்பட்ட ஓய்வு பெற்றவர்கள் பணத்தை செலவிட தயாராக உள்ளனர். அவர்களுக்காக இந்த புதிய ரெயில் வடிவமைக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அடுத்த 10 ஆண்டுகளில் முதியவர்கள் மூலம் 30 ட்ரில்லியன் யுவான் வளர்ச்சி இலக்கை அடைய நிர்ணயித்து உள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )