பாராளுமன்றம் அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பலாங்கொட கஸ்ஸப தேரர் கைது

பாராளுமன்றம் அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பலாங்கொட கஸ்ஸப தேரர் கைது

 இலங்கை மின்சார சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பாராளுமன்றத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பலாங்கொடை கஸ்ஸப தேரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை மின்சார சட்டமூலத்தினூடாக அடிப்படை உரிமை மீறப்படுவதால், அரசியலமைப்பிற்கு ஏற்ற வகையில் சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியமாகும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.

உயர் நீதிமன்றத்தினால் பரிந்துரைக்கப்பட்ட திருத்தங்களை மேற்கொள்ளும் பட்சத்தில், சட்டமூலத்தை இலகுவாக நிறைவேற்றிக்கொள்ள முடியும் என அண்மையில் சபாநாயகர் பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

எவ்வாறாயினும், பாராளுமன்றத்தில் எரிசக்தி மற்றும் போக்குவரத்து துறைசார் மேற்பார்வைக் குழு முன்வைத்த விடயங்கள் மற்றும் நீதிமன்றத்தினால் முன்வைக்கப்பட்ட திருத்தங்களுடன் இலங்கை மின்சார சட்டமூலம் நிறைவேற்றப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர குறிப்பிட்டிருந்தார்.

இதேவேளை, எதிர்வரும் ஜூலை முதலாம் திகதி முதல் மின் கட்டணம் குறைக்கப்படவுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர பாராளுமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )