
தலைமன்னாரிலிருந்து அகதிகளாக இந்தியாவில் தஞ்சம் புகுந்த தமிழ் குடும்பம்
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 சிறுவர்கள் உட்பட 4 பேர் இலங்கை தலைமன்னாரில் இருந்து அகதிகளாக புறப்பட்டு இன்று (25) அதிகாலை 2 மணிக்கு இராமேஸ்வரம் அரிச்சல்முனை கடலோரப் பகுதிக்கு சென்றடைந்துள்ளனர்.
இதனையடுத்து அவர்களை கடலோர பொலிஸார் மீட்டு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.