கொசுக்களுக்கு இரத்த தானம் செய்யும் நபர்

கொசுக்களுக்கு இரத்த தானம் செய்யும் நபர்

விபத்தில் படுகாயம் அடைந்தவர்களுக்கோ, ஆபரேசனின்போது இரத்தம் தேவைப்படுபவர்களுக்கோ இரத்த தானம் வழங்குவது இயல்பு. மருத்துவ வளர்ச்சியையும் தாண்டி இந்த இரத்த தானம் ஒரு மனிதாபிமான உதவியாக கருதப்படுகிறது. இந் நிலையில் உயிரியலாளர் ஒருவர் கொசுக்களுக்கு தன் மன விருப்பத்தின்படி இரத்த தானம் அளிப்பது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில்  பரவி வருகிறது.

ஆஸ்திரேலியாவை சேர்ந்த பிரபல உயிரியலாளர் பெரன் ரோஸ். கொசுக்களை குறித்தும் அதனின் இனப்பெருக்கம், ஆயுட்காலம் உள்ளிட்டவை குறித்து ஆராய்ச்சி செய்கிறார். இதற்காக ஆய்வகம் ஒன்றை அமைத்து கொசுக்களை அதிகளவில் உற்பத்தி செய்து வருகிறார். இதனால் அவரை ‘கொசு மனிதன்’ எனவும் செல்லமாக அழைக்கிறார்கள். இந்நிலையில் கொசுக்களின் உணவுக்காக அவர் தன் கையையே நீட்டி இரத்தத்தை தானமாக கொடுக்கிறார்.

அவரின் கையை மொய்க்கும் கொசுக்கள் கூட்டம் கண் இமைக்கும் நேரத்தில் இரத்தத்தை உறிஞ்சி குடிக்கிறது. இதுதொடர்பான வீடியோ வலைத்தளத்தில் வெளியாகி அதிகமான பார்வைகளையும் வித்தியாசமான கருத்துக்களையும் பெற்று வருகிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )