சிறுமியை கடத்திச் சென்ற மூவர் கைது
புத்தல பகுதியில் 14 வயதுடைய சிறுமி ஒருவரை கடத்திச் சென்று பாதாள அறையொன்றில் மறைத்து வைத்திருந்த சம்பவம் தொடர்பில் 20 வயதுடைய இளைஞர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த மூவரும் கடந்த 9 ஆம் திகதி சிறுமியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அந்த சிறுமியை கடத்திச் சென்றுள்ளனர். பின்னர் தனது மகளை கடத்திச்சென்றுள்ளதாக அவரது தந்தை புத்தல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.
இதன்படி முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் பின்னர் புத்தல பொலிஸார் சிறுமியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
CATEGORIES Sri Lanka