வடகொரியா செல்கிறார் புதின்

வடகொரியா செல்கிறார் புதின்

உக்ரேன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவதால் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உக்ரேனுக்கு ஆயுத உதவி வழங்கி வருகின்றன.

வடகொரியாவிடம் இருந்து ரஷ்யா ஆயுதங்கள் பெறுவதாக அமெரிக்கா குற்றம்சாட்டி வந்த நிலையில் வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் கடந்த ஆண்டு ரஷ்யா சென்றிருந்தார். அப்போது ஆயுதங்கள் தயாரிப்பதற்கான தொழில்நுட்பத்தை ரஷ்யா வடகொரியாவுக்கு வழங்க இருப்பதாக பரபரப்பாக பேசப்பட்டது.

இந் நிலையில் இரண்டு நாள் பயணமாக இன்று (18) புதின் வடகொரியா செல்கிறார். வடகொரியா செல்லும் அவர் அந்நாட்டு ஜனாதிபதி  கிம் ஜாங் உன் உடன் பேச்சுவார்த்தை நடத்துவார் எனவும் இராணுவம் ஒத்துழைப்பை நீட்டிப்பது குறித்து பேசுவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

ரஷ்யா இது உறுதிப்படுத்திய நிலையில், வடகொரிய அரசின் செய்தி நிறுவனம் இது தொடர்பாக ஏதும் தெரிவிக்கவில்லை. புதின் ரஷ்யா சென்றால், கடந்த 24 வருடத்தில் முதல் பயணம் இதுவாக இருக்கும்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )