இலங்கையில் பிறப்பு வீதம் வீழ்ச்சி
இலங்கையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் பிறப்பு எண்ணிக்கை 100,000இற்கும் மேல் குறைவடைந்துள்ளதாகவும், இறப்பு எண்ணிக்கை 35,000ஆக அதிகரித்துள்ளதாகவும் மகப்பேற்று மருத்துவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருமணமான பல தம்பதிகள் கருவுற்ற காலத்தில் இலங்கையையை விட்டு வெளியேறியதே பிறப்புகள் குறைவதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளதாக மகப்பேற்று வைத்தியர் பேராசிரியர் சனத் லெனரோல் தெரிவித்துள்ளார்.