உலகின் விலை உயர்ந்த தண்ணீர்

உலகின் விலை உயர்ந்த தண்ணீர்

பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் தண்ணீர் என்பது மிகவும் முக்கியமானது. உயிர் வாழ்வதற்கும் வளர்வதற்கும் தண்ணீர் அவசியம். மனித உடல் சுமார் 70% நீரால் நிரம்பியுள்ளது. உடலில் இருக்கும் நீர் செரிமானம், ஊட்டச்சத்துகளை எல்லா பாகங்களுக்கும் கொண்டு செல்லுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்து வருகிறது. நீரேற்றம் இல்லாவிட்டால், நம்மால் எதையும் செய்ய முடியாது. நமது உடலில் தண்ணீரின் அளவு சற்று குறைந்தாலும், நமது உடல் சோர்ந்துவிடும்.

உயிரினங்களைத் தாண்டி, விவசாயம், சுகாதாரம் மற்றும் தொழில்துறைக்கு தண்ணீர் மிகவும் முக்கியம். பயிர்களுக்கு பாசனம் செய்யவும், கால்நடைகளை வளர்க்கவும் தண்ணீர் அவசியமாகிறது. தொழில்துறையின் பல்வேறு செயல்பாடுகளுக்கு தண்ணீர் பயன்படுகிறது. எனவே, தண்ணீர் ஒவ்வொரு மனிதனின் அடிப்படை உரிமை என்று சொல்லப்பட்டாலும், தண்ணீர் இன்று மிகப்பெரிய சந்தையாக மாறியுள்ளது.

இந்நிலையில், உலகின் மிக விலை உயர்ந்த பாட்டில் தண்ணீராக, ஜப்பானில் இருக்கும் ஃபிலிகோ ஜூவல்லரி நிறுவனத்தின் தண்ணீர் பாட்டில் இருந்து வருகிறது. இதன் விலை 1,390 டொலர். அதாவது இலங்கை மதிப்பில், ஒரு லிட்டர் வாட்டர் பாட்டலின் விலை ரூ. 424868.

ஃபிலிகோ ஜூவல்லரி நிறுவனத்தின் தண்ணீரை வேறுபடுத்திக் காட்டுவது தண்ணீரின் தூய்மை மட்டுமல்ல, அதன் ஆடம்பரமான பேக்கிங் முக்கிய காரணம். இந்த தண்ணீர் பாட்டில்கள் படிகங்களைப் போல செதுக்கப்பட்டு, அலங்கரிக்கப்பட்டுள்ளன.

முதலில் இந்த தண்ணீர் கோபி என்ற இடத்தில் இருக்கும் இயற்கை நீரூற்றில் இருந்து எடுக்கப்படுகிறது. அது, மிகவும் அழகாக தரத்துடன் தயாரிக்கப்பட்ட பாட்டில்கள் நிரப்பி விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது. தண்ணீரின் விலை அதிகமாக நினைத்தாலும், இந்த தண்ணீர் பாட்டிலின் ஆடம்பரத்திற்காகவே பலரும் இதை வாங்குகிறார்கள். சுத்தமான நீரை பெறுவது பலருக்கும் சவாலாக இருந்து வருகிறது. ஆனால், இதுபோன்ற நிறுவனங்களின் தண்ணீரும் மக்களால் நுகரப்படுகிறது என்பதுதான் ஆச்சரியம்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )