உடைகளை எத்தனை நாளுக்கு ஒருமுறை கழுவ வேண்டும் ?

உடைகளை எத்தனை நாளுக்கு ஒருமுறை கழுவ வேண்டும் ?

சுத்தம் சுகம் தரும் என்று ஒரு பழமொழி உண்டு. நாம் நமது உடலை மட்டுமல்ல ஆடைகளையும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். அழுக்கான துணிகளை பயன்படுத்தும்போது அது நமது தோலில் பாதிப்பை ஏற்படுத்தும்.

துணிகளை துவைப்பதற்கும் ஒரு முறை உண்டு. துவைக்கும்போது ஒவ்வொரு துணியினதும் அதிர்வெண் மாறும். அந்த வகையில் ஜீன்ஸ், சொக்ஸ், உள்ளாடைகள், சட்டை ஆகியவற்றை எப்படி துவைக்கலாம்? எத்தனை நாளுக்கு ஒருமுறை துவைக்கலாம் என்று பார்ப்போம்.

ஜீன்ஸ்

நம்மில் பல பேர் ஜீன்ஸை ஒரு தடவை துவைத்துவிட்டு, அதனை 4 அல்லது 5 முறை வரையில் பயன்படுத்துவார்கள்.

ஜீன்ஸ் மிகவும் கடினமான துணி என்பதால், இதனை அடிக்கடி துவைப்பதும் முடியாத காரியம். அப்படி துவைத்தால் அதன் நிறம் மாறிவிடும்.

இதனால் ஒருமுறை ஜீன்ஸை கழுவிவிட்டு அதனை வெயிலில் காய வைத்துவிட்டு மீண்டும் பயன்படுத்தலாம்.

சொக்ஸ்

சொக்ஸ்களையெல்லாம் ஒரு முறை பயன்படுத்தியதன் பின்னர் உடனே துவைத்துவிட வேண்டும். காரணம், நாள்முழுவதும் காற்றுப்புக இடமில்லாமல் காலிலேயே அணிந்திருப்பதால் அதில் அதிகளவான பக்டீரியாக்கள் காணப்படும். அதுமட்டுமின்றி வியர்வை, துர்நாற்றம் போன்றவற்றின் காரணமாகவும் சொக்ஸை துவைக்காமல் பயன்படுத்தக் கூடாது.

உள்ளாடை

நாள் முழுவதும் நமது உடலுடன் ஒட்டியிருப்பது உள்ளாடைகள். அதனால் உள்ளாடைகளை ஒரு தடவை உபயோகப்படுத்தியதன் பின்னர் துவைக்க வேண்டும். நமது உடலிலிருந்து வெளியாகும் வியர்வை உள்ளாடைகளில் நிச்சயமாக ஒட்டியிருக்கும். எனவே இதை துவைக்காமல் மீண்டும் மீண்டும் பயன்படுத்தினால் தோல் வியாதிகள் வரும் வாய்ப்புகள் அதிகம்.

ஷர்ட்,டீஷர்ட்

ஷர்ட், டீஷர்ட் ஆகியவற்றை ஒருமுறை பயன்படுத்தியதன் பின்னர் அவை அழுக்காக இல்லாவிட்டாலும் துவைப்பது சிறந்தது. வெயில் காலத்தில் இரண்டு தடவையும் குளிர் காலத்தில் ஒரு தடவையும் துவைத்து பயன்படுத்தலாம்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )