அந்த இடத்தில் உங்களுக்கு மச்சம் இருக்கா ?
அதிர்ஷ்டம் வந்து விட்டால் “அவனுக்கு என்னப்பா மச்சக்காரன்” என்பார்கள் அது உண்மைதான்.
இந்த 5 இடத்தில் உங்களுக்கு மச்சம் இருந்தால் நீங்கள் கோடீஸ்வரர் ஆவது உறுதி என மச்ச சாஸ்திரம் கூறுகிறது.
நம் உடலில் இருக்கக்கூடிய மச்சங்களும் அதனால் நமக்கு கிடைக்கக்கூடிய பலன்களும் என்ன என்பது குறித்து இந்த பதில் தெரிந்துக் கொள்ளலாம்.
உதட்டின் மேல் மச்சம்
ஆண்களுக்கு உதட்டின் மேல் வலது புறத்திலும் பெண்களுக்கு உதட்டின் மேல் இடது புறத்திலும் மச்சம் இருந்தால் அவர்கள் அனைவரது கவனத்தையும் ஈர்ப்பார்கள், நல்ல பலன்கள் அவர்களை தேடி வரும், அதிர்ஷ்டம் ஏற்படும், இவர்கள் கண்டிப்பாக கோடீஸ்வரர் ஆவது உறுதி.
புருவத்தில் மச்சம்
ஆண்களுக்கு வலது புருவத்தின் மேல் மச்சம் இருந்தால் அவர்கள் தலைமை பொறுப்பை ஏற்க போகிறார்கள் என்று அர்த்தமாம். அது அரசியலாக இருந்தாலும் சரி அல்லது பெரிய நிறுவனமாக இருந்தாலும் சரி, ஆன்மீகமாக இருந்தாலும் சரி, குடும்பத்திலும் சரி இவர்கள் தலைமை பொறுப்பை ஏற்று நடக்கக்கூடிய நபராக இருப்பார்.
அதேபோல பெண்களுக்கு இடது புருவத்தின் மேல் மச்சம் இருந்தால் அவர்களும் தலைமை பொறுப்பை ஏற்று நடத்தக்கூடிய வல்லமை பெற்றவராக இருப்பார் என்று அர்த்தமாம்.
கன்னத்தின் மச்சம்
வலது கன்னத்தில் மச்சம் இருந்தால், நீங்கள் ஆதிக்கம் செலுத்தும் இயல்புடையவர் என்பதற்கான அறிகுறியாகும். நீங்கள் உங்கள் தர்க்கத்தைப் பயன்படுத்தி வாழ்க்கையில் முடிவுகளை எடுப்பீர்கள், இதனால் சிறந்த முடிவுகளை எடுப்பீர்கள். நீங்கள் வாழ்க்கையில் நன்றாக சம்பாதிப்பீர்கள்.
இடது கன்னத்தில் மச்சம் இருப்பது குறுகிய கோபத்தின் அடையாளம். பொருள்சார் தேவைகளுக்கு கூடுதல் செலவு செய்ய விரும்புகிறீர்கள். கண்டிப்பாக இவர்களும் கோடீஸ்வர்ரர் ஆவது உறுதி என்று மச்ச சாஸ்திரம் கூறுகிறது.
ஆள்காட்டி விரல்
ஆண்களுக்கு வலது கையில் ஆள்காட்டி விரல் கீழ் மச்சம் இருந்தால் அவர்கள் தொட்டது துலங்கும். செல்வ செழிப்போடு இருப்பார்கள். வைரம் வைருடியம் வாங்கும் யோகம் ஏற்படும். தங்கத்தை சேர்த்து வைக்கக்கூடிய குபேரனாக திகழ்வார்கள்.
அதேபோல பெண்களுக்கு இடது கையில் ஆள்காட்டி விரல் கீழ் மச்சம் இருந்தால் செல்வ செழிப்போடு திகழ்வீர்கள். லக்ஷ்மி கடாக்ஷம் நிறைந்ததாக இருக்கும் நீங்கள் தீர்க்க கரசியாக திகழ்வீர்கள்.
தொப்புள்
பெண்களுக்கு தொப்புளில் இடது புறத்தில் மச்சம் இருந்தால் வம்சம் விருத்தியாகும். அந்தக் குழந்தையின் மூலம் பணம் பெருகும் சொத்துக்கள் குவியும்.
தாய் மூலமாகவும் ஏற்படும். அதேபோல வலது புறத்தில் தொப்புளில் மச்சம் இருந்தால் ஆண்களுக்கு வாழையடி வாழையாக சொத்து சேர்க்கும் யோகம் கிடைக்கப்போகிறது என்று அர்த்தமாம்.