ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 2,373 டெங்கு நோயாளர்கள் பதிவு
2024 ஆகஸ்ட் மாதத்தின் முதல் 18 நாட்களில் மட்டும் 2,373 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி, இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 35,118 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதிகளவான டெங்கு நோயாளர்கள் மேல் மாகாணத்திலிருந்து பதிவாகியுள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 14,359 ஆகும்.
இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 16 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.