அமெரிக்க பசுபிக் கப்பற்படை கட்டளை தளபதி ஸ்டீவ் கேலர் இன்று இலங்கை விஜயம்

அமெரிக்க பசுபிக் கப்பற்படை கட்டளை தளபதி ஸ்டீவ் கேலர் இன்று இலங்கை விஜயம்

நான்கு நட்சத்திர அமெரிக்க கடற்படை அட்மிரலும் அமெரிக்க பசிபிக்கப்பற்படையின் கட்டளைத் தளபதியுமான அட்மிரல் ஸ்டீவ் கேலர், இன்று (10) இலங்கை வரவுள்ளார்.

2021 ஆம் ஆண்டுக்குப் பின்னர் அமெரிக்க இராணுவத்தைச் சேர்ந்த அதியுயர் அதிகாரியொருவர், நாட்டுக்கு விஜயம் செய்யும் சந்தர்ப்பம் இதுவாகும்.

அவரது இலங்கை விஜயத்தின் போது, நீடித்த மீண்டெழும் தன்மையுடைய, சுதந்திரமான மற்றும் திறந்த இந்தோ- பசிபிக் பிராந்தியத்தைப் பேணிப்பாதுகாப்பதற்காக அமெரிக்கா, இலங்கையிடையே காணப்படும் வலுவான பங்காண்மையை அடமிரல் கேலர் மீள வலியுறுத்தவுள்ளார்.

இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் அதிகரித்து வரும் பாதுகாப்பு சவால்கள் குறித்தும் இதில் கலந்துரையாடப்படும்.

கடல்சார் கள விழிப்புணர்வு நடவடிக்கைகள்,பேரனர்த்தங்களிலான பதிலளிப்புக்களில் ஒத்துழைப்பை பலப்படுத்துவது குறித்தும் இங்கு கருத்துக்கள் பரிமாறப்படவுள்ளன.

நாடுகடந்த அச்சுறுத்தல்களை முறியடிப்பதில் இலங்கைக்கு உதவி செய்வதற்கான அமெரிக்காவின் உறுதிப்பாட்டை மீள வலியுறுத்துவதற்காகவும், மற்றும்
அமெரிக்க மற்றும் இலங்கை இராணுவங்களுக்கிடையே வளர்ந்து வரும் ஒத்துழைப்பு தொர்பாக கலந்துரையாடுவதற்காகவும் அட்மிரல் கேலர் சிரேஷ்ட இலங்கை அதிகாரி
களுடன் சந்திப்புகளை மேற்கொள்ளவுள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )