ரிஷாட்டின் கட்சி எம்.பிக்கள் ஜனாதிபதிக்கு ஆதரவு !
ரிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐக்கிய மக்கள் சக்தியின் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளனர்.
அநுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹூமான், புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம், திகாமடுல்லை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஷாரப் ஆகியோரே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளனர்.
TAGS All Ceylon Makkal CongressHot NewsMP Ali Sabry RahimMP Ishaq RahumanMuslim communityPresident Ranil Wickremesinghepresidential electionPuttalam DistrictRishad BathiudeenS.M.M. Muszhaaraffsajith premadasaSri lanka