கோடி நன்மைகள் கொட்டிக் கிடக்கும் கொத்தமல்லி இலை
கொத்தமல்லி இலை உண்பதால் உடலுக்கு ஏராளமான நன்மைகள் உண்டு. இது வித்தியாசமான சுவையுடன் ஆரோக்கிய நன்மைகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது.
கொத்தமல்லியின் இலை, தண்டு, வேர் என அனைத்துமே மருத்துவ பயன் கொண்டவை.
நன்மைகள்
- கொத்தமல்லி இலைகளை உண்பதால் உடலிலுள்ள கெட்ட கொழுப்புக்கள் குறையும்.
- உடல் பருமன் பிரச்சினை சரியாகும்.
- கொத்தமல்லி இலைகளிலுள்ள விட்டமின் ஏ,ஈ போன்றவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும்.
- விட்டமின் சி இரத்த வெள்ளை, அணுக்களை சிறப்பாக செயல்பட வைக்கும்.
- எலும்பு ஆரோக்கியத்துக்கு ஏற்ற கல்சியம், மக்னீசியம், மாங்கனீஸ், பொஸ்பரஸ் ஆகிய தாதுக்கள் அதிகம் உள்ளது.
- இன்சுலின் சுரப்பை அதிகப்படுத்துகிறது.
- செரிமானச் சக்தியை எளிதாக்குகிறது.
- இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்கிறது.
- மூட்டுவலியிலிருந்து நிவாரணம் அளிக்கிறது.
- கொத்தமல்லி இலைகளின் பச்சை நிறத்துக்கு காரணம் அதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் தான். இது நொதி செயல்பாட்டை அதிகரிக்கிறது.
- தெளிவான கண் பார்வைக்கு உதவும்.
- வயிற்றுவலி, குடல் பிடிப்பு, வாயு பிரச்சினை, குமட்டல் போன்ற பிரச்சினைகளை சரி செய்ய உதவுகிறது.
- நார்ச்சத்து அதிகம் இருப்பதால் மலச்சிக்கல் ஏற்படாது.