நவம்பர் 21 புதிய பாராளுமன்றத்தின் முதல் நாள்

நவம்பர் 21 புதிய பாராளுமன்றத்தின் முதல் நாள்

புதிய பாராளுமன்றத்தின் முதல் நாள், நவம்பர் 21 ஆம் திகதி என பாராளுமன்ற தொடர்பாடல் பிரிவு தெரிவித்துள்ளது.

10ஆவது பாராளுமன்றத்துக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான பொதுத் தேர்தல் நவம்பர் 14ஆம் திகதி நடைபெறவுள்ளது.

மக்களால் தெரிவு செய்யப்பட்ட 196 பாராளுமன்ற உறுப்பினர்கள், தேசிய பட்டியலிலிருந்து 29 பாராளுமன்ற உறுப்பினர்கள் என, பாராளுமன்றத்துக்கு  225 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

பாராளுமன்றத்தின் முதல் அமர்வின் முதல் நாளில் பல சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக பாராளுமன்ற  தகவல் தொடர்புப் பிரிவு அறிவித்துள்ளது.

முதல் நாளில், அவையின் முக்கியப் பொறுப்புகள், பாராளுமன்ற பொதுச் செயலாளருக்கு ஒதுக்கப்படும். முதல் நாளில், எம்.பி.,க்களுக்கு இருக்கை ஒதுக்கப்படாது என்பதால், எம்.பி.,க்கள், தாங்கள் விரும்பும் எந்த இருக்கையில் அமரவும் வாய்ப்பு உள்ளது. 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )