கலப்பட மஞ்சளைக் கண்டறிவது எப்படி?

கலப்பட மஞ்சளைக் கண்டறிவது எப்படி?

வீட்டில் அனைத்து விதமான சமையலிலும் அன்றாடம் பயன்படுத்தும் ஒரு பொருள் மஞ்சள்.

சுவை, நிறத்துக்காக மட்டுமின்றி உடல் ஆரோக்கியத்திற்காகவும் பயன்படுத்தப்படுகிறது. நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்க மஞ்சளை உணவில் சேர்க்க பரிந்துரைக்கப்படுவதுடன் ஆயுர்வேத மருத்துவத்திலும் முக்கியப் பங்காற்றுகிறது.

ஆனால் இந்த மஞ்சளில் தற்போது அதிகம் கலப்படம் செய்யப்படுவதாக தகவல்கள் வருகின்றன.

மெட்டானில் மஞ்சள், லெட் குரோமேட், சுண்ணாம்பு தூள், காட்டு மஞ்சள் ஆகியவை கலக்கப்படுகிறது. இவை உடல்ரீதியாக மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில் கலப்படம் செய்யப்பட்ட மஞ்சளைக் கண்டறிவது எப்படி? என பார்க்கலாம்.

சிறிது மஞ்சள் எடுத்து உங்கள் உள்ளங்கையில் வைத்து 10 – 20 நொடிகள் தேய்த்து பின்னர் கழுவவும். லேசான மஞ்சள் கறை இருந்தால் அது தூய மஞ்சள்.

மேலும் ஒரு டம்ளரில் தண்ணீர் எடுத்து அதில் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்க்கவும். சிறிது நேரத்தில் மஞ்சள் தூள் அனைத்தும், டம்ளரில் கீழே தங்கிவிட்டால் அது நல்ல மஞ்சள். கீழே படியவில்லை என்றால் அது கலப்படம் செய்யப்பட்டது. சில துகள்கள் மேலே மிதந்தாலும் அதில் கலப்படம் இருக்க வாய்ப்பு அதிகம்.

அதேபோல மஞ்சள் கலக்கப்பட்ட தண்ணீர் வெளிர் மஞ்சள் நிறமாக இருந்தால் தூய்மையானது. கலப்படம் செய்யப்பட்டிருந்தால் அடர்த்தியான மஞ்சளாக இருக்கும்.

மஞ்சள் தூளை ஒரு சோதனைக்குழாயில் போட்டு அதில் சிறிது ஹைட்ரோகுளோரிக் அமிலத்தை ஊற்றிக் கலக்கவும்.

அது வெளிர் சிவப்பு(பிங்க்) நிறமாக மாறினால் அதில் மெட்டானில் அதிகம் கலக்கப்பட்டுள்ளது என்று அர்த்தம்.

இது வயிற்று வலி, குமட்டல், செரிமானக் கோளாறுகள் ஏற்படும் என கூறப்படுகிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )