இரட்டைத் தாடை பிரச்சினையால் அவதியா ?
கழுத்துப் பகுதிகளில் சேரும் கொழுப்பினால் இரட்டைத் தாடை பிரச்சினை ஏற்படுகிறது.
வயது ஏறும்போது சருமத் தோல் தளர்வு, முகத்தை நேராக வைத்து அமராமல் இருப்பது போன்ற காரணங்களாலும் இரட்டை தாடை பிரச்சினை ஏற்படுகிறது.
இரட்டை தாடை பிரச்சினையை சரி செய்வதற்கு சில விடயங்கள் உதவும்.
முதலில் இந்த பயிற்சியை முயற்சித்து பார்க்க வேண்டும்.
உங்கள் முகத்தை நேராக வைத்துக்கொண்டு, கீழ் தாடை பகுதியை மட்டும் முன்னோக்கியும் பின்னோக்கியும் அழுத்தம் கொடுத்து நகர்த்த வேண்டும்.
இப்படி தொடர்ந்தும் 10 தடவைகள் செய்தால் நல்ல மாற்றம் கிடைக்கும்.
கழுத்தை நேராக வைத்து வாயை முடிந்த வரையில் திறந்தபடி வைத்திருக்க வேண்டும்.
இவ்வாறு செய்யும்பொழுது கீழ் உதட்டைச் சுற்றியுள்ள தசைகள் தளர்வடையாமல் இருக்கும். கீழ் தாடையிலுள்ள தசைகள் இறுக்கமடைந்தால் இந்த இரட்டை தாடை பிரச்சினை குறையும்.
சுயிங்கத்தை வாயில் போட்டு மென்று கொண்டிருந்தாலும் இந்த இரட்டை தாடை பிரச்சினை சரியாகும்.
சுயிங்கத்தை வாயில் போட்டு மெல்வதன் மூலம் கழுத்துப்பகுதியில் தேங்கியிருக்கும் கொழுப்பு குறையும்.