இஞ்சி டீயை காலையில் வெறும் வயித்துல குடிக்காதீங்க

இஞ்சி டீயை காலையில் வெறும் வயித்துல குடிக்காதீங்க

இஞ்சியில் ஏராளமான மருத்துவ குணங்கள் இருப்பதால் தினமும் தேநீரில் சிறிது கலந்து பருகினால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும்.

எனினும், இஞ்சி டீயை அளவுக்கு அதிகமாக குடித்தாலோ மற்றும் காலையில் வெறும் வயிற்றில் குடித்தாலோ பலவிதமான பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.

ஒருவர் இஞ்சி டீயை அதிகமாக குடித்தால் எந்த மாதிரியான பக்க விளைவுகளை சந்திக்க நேரிடும் என்பதைக் காண்போம்.

வயிற்றுப்போக்கு

இஞ்சி டீயை அதிகமாக குடிப்பது வயிற்றுப் போக்கின் அபாயத்தை அதிகரிக்கும். இஞ்சியில் உள்ள பண்புகளை அதிகமாக எடுக்கும் போது, அது செரிமானத்தில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தி, வயிற்றுப் போக்கிற்கு வழிவகுப்பதோடு, மிகுந்த உடல் அசதியை ஏற்படுத்தும்.

இரத்த அழுத்த பிரச்சினை

இரத்த அழுத்த பிரச்சினையைக் கொண்டவர்கள் இஞ்சி டீ குடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

இது தவிர சாதாரண இரத்த அழுத்தத்தைக் கொண்டவர்கள் இஞ்சி டீயை அளவாக குடிக்க வேண்டும். இல்லாவிட்டால் இரத்த அழுத்த பிரச்சினையை சந்திக்க நேரிடும்.

தலைமுடி உதிர்வு

இஞ்சியில் உள்ள ஜின்ஜெரால் தலைமுடி உதிர்வைத் தடுக்க உதவும். அதே வேளையில் அந்த இஞ்சியை அளவுக்கு அதிகமாக எடுத்தால், அது அப்படியே எதிர்மறையாக செயல்பட்டு, முடி உதிர்வை உண்டாக்கும்.

எனவே இஞ்சி டீ குடிக்கும் பழக்கம் இருந்து, திடீரென்று தலைமுடி அதிகம் உதிர்வதை அனுபவித்தால், நீங்கள் இஞ்சி டீயை அதிகமாக குடிக்கிறீர்கள் என்று அர்த்தம்.

இம்மாதிரியான சூழ்நிலையில் இஞ்சி டீ குடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

வயிற்று எரிச்சல்

இஞ்சியில் உள்ள ஜின்ஜெரால் வயிற்றி அமில உற்பத்தியை அதிகரிக்கும். எனவே இஞ்சி டீயை அதிகமாக குடிக்கும் போது, அது வயிற்றில் எரிச்சல் உணர்வை ஏற்படுத்துகிறது. குறிப்பாக இஞ்சி டீயை அதிகமாக குடித்தால், அது மலசிக்கல் மற்றும் வாய்வு தொல்லையை உண்டாக்கும்.

வயிற்று எரிச்சல்

இஞ்சியில் உள்ள ஜின்ஜெரால் வயிற்றி அமில உற்பத்தியை அதிகரிக்கும். எனவே இஞ்சி டீயை அதிகமாக குடிக்கும் போது, அது வயிற்றில் எரிச்சல் உணர்வை ஏற்படுத்துகிறது. குறிப்பாக இஞ்சி டீயை அதிகமாக குடித்தால், அது மலசிக்கல் மற்றும் வாய்வு தொல்லையை உண்டாக்கும்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )