கொய்யா பழத்தை இந்த நேரத்தில் தான் சாப்பிட வேண்டும்
பழங்களின் ஊட்டச்சத்துக்கள் முழுமையாக கிடைக்க சரியான முறையில் சப்பிட வேண்டும். அந்த வகையில் கொய்யா பழம் மிகுந்த ஊட்டச்சத்து உடைய பழம்.
அதை எப்போது சாப்பிட வேண்டும்? என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளுங்கள்.
கொய்யா பழம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை. அது உடலின் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் பழமாக கருதப்படுகிறது.
அதிலும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் 2 கொய்யா பழம் சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
கொய்யா பழங்களில் பொட்டாசியம், கார்போஹைட்ரேட், உணவு நார்ச்சத்து மற்றும் புரதம் போன்ற சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன.
அத்துடன் வைட்டமின் சி, வைட்டமின் பி6, கால்சியம், இரும்பு, மக்னீசியம் போன்ற சத்துக்களும் இதில் நிறைந்து உள்ளன.
அது மட்டுமல்லாது நூறு கிராம் கொய்யாவில் சுமார் முந்நூறு மில்லிகிராம் அஸ்கார்பிக் அமிலம் அதாவது வைட்டமின்-சி உள்ளது.
கொய்யா பழங்கள் அடிக்கடி சாப்பிடுவதால் வயிறு பிரச்சினை சரியாகும்.
கொய்யா பழத்தை எப்போது சாப்பிட வேண்டும்
பொதுவாகவே இந்த கொய்யா பழத்தை மாலை அல்லது இரவில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.
கொய்யாவை இரவில் சாப்பிடுவதால், அதன் செரிமானமும் சரியாக நடைபெறாது.
கொய்யாவை பகல் மற்றும் மதியம் மட்டுமே உட்கொள்ள வேண்டும்.
மதிய உணவுக்கு பின்பு சுமார் ஒன்றரை மணி நேரம் கழித்து இந்த கொய்யாப் பழத்தை உட்கொள்வதால் அனைத்து வயிற்றுப் பிரச்சினைகளிலிருந்தும் நிவாரணம் கிடைக்கும் என்று உணவியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.