கற்பூரவள்ளி மசாலா டீ

கற்பூரவள்ளி மசாலா டீ

கற்பூரவள்ளி மசாலா டீயின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. செய்து ருசியுங்கள்.

தேவையான பொருட்கள்

  1. கற்பூரவள்ளி இலைகள் – 8
  2. ஏலக்காய் – 2
  3. மிளகு – 10
  4. இஞ்சி – 2 துண்டு
  5. பால் – 1 டம்ளர்
  6. தண்ணீர் – 1 1/2 டம்ளர்
  7. மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
  8. டீத்தூள் – 2 டீஸ்பூன்
  9. சர்க்கரை – 4 டீஸ்பூன்

செய்முறை

முதலில் கற்பூரவள்ளி இலைகளை நீரில் நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.

பின்னர் இடிக்கும் உரலில் ஏலக்காய், மிளகு சேர்த்து நன்கு பொடித்துக் கொள்ள வேண்டும்.

பின்பு அதில் இஞ்சியை சேர்த்து நன்கு தட்டிக் கொள்ள வேண்டும்.

அடுத்து ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் பாலை ஊற்றி, அதில் 1 1/2 டம்ளர் நீரை ஊற்றிக் கொள்ள வேண்டும்.

பின் அதில் கற்பூரவள்ளி இலைகளை பிய்த்து போட வேண்டும்.

பிறகு அதில் மஞ்சள் தூள் சேர்த்து அடுப்பில் வைக்க வேண்டும்.

பின் அதில் டீத்தூளை சேர்த்து, தட்டி வைத்துள்ள மசாலா பொருட்களை சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.

டீ நன்கு பொங்கி வந்த பின், மிதமான தீயில் வைத்து 5 நிமிடம் டீயை கொதிக்க வைக்க வேண்டும்.

5 நிமிடம் நன்கு கொதித்த பின், மீண்டும் தீயை அதிகரித்து ஒருமுறை பொங்கி வந்ததும், அதில் சர்க்கரை சேர்த்து கிளறி இறக்கி வடிகட்டினால், சுவையான கற்பூரவள்ளி மசாலா டீ தயார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )