சாப்பிடணும் ஆனா பசியே இல்ல ; என்ன காரணம் தெரியுமா ?
சிலருக்கு எந்நேரமும் பசி எடுக்கும். ஆனால், ஒரு சிலருக்கு பசியே எடுக்காது.
அந்த வகையில் பசி எடுக்காமல் போவதற்கு பல காரணங்கள் உள்ளன.
ஒற்றைத் தலைவலி, வாந்தி வருதல் போன்று காரணங்களால் பசியின்மை ஏற்படும்.
உடல் உழைப்பு சரியாக இல்லாவிட்டால் பசி எடுக்காது.
தைரொய்ட் பிரச்சினை இருப்பவர்களுக்கு பசி எடுக்காது.
சில நேரங்களில் நாம் மனம் சோர்வடைந்து காணப்படும்போது, அது மூளையைத் தூண்டி ஒரு ஹோர்மோனை சுரக்கச் செய்யும். இது பசியின்மையை தூண்டும்.
மூளையில் காயம் அல்லது பாதிப்புக்கள் ஏற்பட்டாலும் உணவின் மீதான நாட்டம் இருக்காது.
சளி பிடித்தாலும் உணவில் விருப்பமிருக்காது.
கர்ப்பிணிகளுக்கு கர்ப்ப காலத்தில் உணவின் மீது ஒருவித வெறுப்பு ஏற்படும்.
புற்றுநோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு பசி எடுக்கவே எடுக்காது.
ஜீரண நரம்பு பாதிப்படைவதால் பசி எடுக்காது செரிமானம் குறைந்துவிடும்.
பசி வராமல் இருப்பதற்கு இதுபோன்ற நிறைய காரணங்கள் உள்ளன. ஆனால், என்னதான் பசி வராவிட்டாலும் உணவு உண்ண வேண்டியது அவசியம்.
உணவின் மூலம் தான் நம் உடலுக்குத் தேவையான உப்பு, சீனி, புரதம், மாவுச்சத்து, கொழுப்புச்சத்து,விட்டமின் போன்றவை கிடைக்கின்றன.
ஒரு வேளை அல்லது இரண்டு வேளை பசி எடுக்காவிட்டால் பரவாயில்லை. ஆனால், இரண்டு நாட்களுக்கு மேலாக பசியில்லாமல் இருந்தால் மருத்துவரை நாட வேண்டும்.