சேமியா பிரியாணி ; இப்படி செய்து பாருங்க

சேமியா பிரியாணி ; இப்படி செய்து பாருங்க

பிரியாணி பிடிக்காதவர்கள் இருக்க முடியாது. பிடித்த உணவையே வித்தியாசமாக செய்து சாப்பிட்டால் எப்படியிருக்கும். அந்த வகையில் சேமியா பிரியாணி எப்படி செய்வதெனப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

  • சேமியா – 1 கப்
  • தக்காளி – 1
  • வெங்காயம் – 2
  • உருளைக்கிழங்கு, பீன்ஸ்,கெரட் – 1/2 கப்
  • பச்சைப் பட்டாணி – 1/4 கப்
  • பச்சை மிளகாய் – 2
  • மிளகாய் தூள் – 1/2 மேசைக்கரண்டி
  • மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
  • மசாலாத் தூள் – 1/2 மேசைக்கரண்டி
  • புதினா – தேவையான அளவு
  • பட்டை – 1
  • இஞ்சி, வெள்ளைப்பூண்டு விழுது – 1 கரண்டி
  • ஏலக்காய், கிராம்பு – 2
  • கொத்தமல்லித் தழை – தேவையான அளவு
  • கல் உப்பு – தேவையான அளவு
  • எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

முதலில் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, அதில் ஏலக்காய், கிராம்பு,பட்டை போட்டு தாளிக்கவும்.

பின் அதில் வெங்காயம் சேர்த்து வதக்கி, இஞ்சி, வெள்ளைப்பூண்டு விழுது சேர்த்து வதக்க வேண்டும்.

அத்துடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், மசாலாத் தூள், தக்காளி, பச்சைப் பட்டாணி, பீன்ஸ், உருளைக்கிழங்கு, கெரட், கிழங்கு, புதினா அனைத்தையும் சேர்த்து வதக்க வேண்டும்.

பின்னர் தேவையான அளவு உப்புடன் இரண்டு கப் தண்ணீர் சேர்க்க வேண்டும்.

தண்ணீர் கொதித்தவுடன் சேமியாவைப் போட்டு கிளறி அடுப்பை மிதமான தீயில் வைத்து, கொத்தமல்லித் தழை தூவி இறக்கினால் ராகி சேமியா பிரியாணி ரெடி.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )