குரங்கம்மை குறித்து சுகாதார அமைச்சு அறிவிப்பு
விமான நிலையத்தினூடாக நாட்டிற்குள் பிரவேசிக்கக் கூடிய குரங்கம்மை நோயாளர்களை இனங்காண்பதற்காக நாடளாவிய ரீதியில் தடுப்பூசி போடும் முறை பலப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
நோயாளர்கள் பதிவாகினால், அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சையளிப்பதற்கான வசதிகள் கொழும்பு தொற்று நோய் நிறுவகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் டொக்டர் பாலித மஹிபால அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.
கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் குரங்கம்மை நோயாளர்களைக் கண்டறிவதற்கான ஆய்வுகூட வசதிகள் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.