சீனப் பிரதமரை உற்சாகமாக வரவேற்ற ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புடின்
ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) கடந்த மே மாதம் சீனா ஜனாதிபதி ஜி ஜின்பிங்கை சந்தித்தார்.
இதனை தொடர்ந்து ரஷ்யாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள சீனப் பிரதமர் லீ கியாங் ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை சந்தித்துள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவுகளை மேம்படுத்தவும் அவர்களது வருங்கால திட்டங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாக தகவல்கள் வெளிவருகின்றன.
சீனாவுடனான பொருளாதார மற்றும் வர்த்தக தொடர்புகள் ரஷ்யாவிற்கு பலன்களைத் தருவதாக விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
CATEGORIES World News