பிரியாணி என்ற பெயர் எப்படி வந்தது?

பிரியாணி என்ற பெயர் எப்படி வந்தது?

பெரும்பாலானோருக்கு பிரியாணி என்றால் கொள்ளைப் பிரியம்.காரணம் அதில் சேர்க்கப்படும் சுவையான சேர்மானங்கள் நமது நாக்கின் சுவையரும்புகளை கட்டிப்போட்டு விடுகின்றன.

பிரியாணியில் மட்டன் பிரியாணி, சிக்கன் பிரியாணி, முட்டை பிரியாணி, பன்னீர் பிரியாணி, காளான் பிரியாணி, காய்கறி பிரியாணி என பல வகைகள் உள்ளன.

இப்படி பலரின் விருப்பப் பட்டியலில் முதலிடம் வகுத்திருக்கும் பிரியாணியின் உண்மையான பெயர் என்ன ? எப்படி இதற்கு இந்த பெயர் வந்தது? என என்றாவது சிந்தித்திருப்போமா?

பிரியாணி எனும் பெயர், ‘பிரியன்’ என்ற பெர்ஷிய மொழியிலிருந்து உருவானது. பிரியன் என்றால் சமைப்பதற்கு முன் வறுப்பது என்று அர்த்தம்.

அரிசி எனும் பெர்ஷிய பொருளான பிரிஞ் என்ற சொல்லிலிருந்து இந்த பெயர் வந்தது. முதன் முதலில் மேற்கு ஆசியாவிலிருந்துதான் இந்த பிரியாணி வந்தது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )