எவராலும் இந்த நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது !
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் மட்டுமே இந்த நாட்டை கட்டியெழுப்ப முடியுமென பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா தெரிவித்துள்ளார்.
இந்த நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் இத்தேர்தலில் வெறுப்பு, தற்பெருமை அரசியலை நிராகரித்து உண்மையை மக்களுக்கு எடுத்துரைத்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு இன்னும் ஐந்து வருடங்களுக்கு அதிகாரத்தை வழங்க இந்நாட்டின்
புத்திசாலித்தனமான மக்கள் தீர்மானித்துள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா தெரிவித்துள்ளார்.
இந்த நாட்டை கட்டியெழுப்பக்கூடிய ஒரே தலைவர் ரணில் விக்கிரமசிங்க மட்டுமே எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நீர்கொழும்பு ஒலென்ரா ஹோட்டலில் நடைபெற்ற முக்கிய செயற்பாட்டாளர்களின் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நாம் தலைமையை வழங்கி அனைத்து விடயங்களையும் வென்றெடுத்துள்ளோம்.
மக்களுடன் களத்தில் இருப்பவர்களை அரசியலில் முன்னோக்கி கொண்டுவர வேண்டும்.
மக்களுக்கு உதவாதவர்களை கொண்டு வருவதன் மூலம் மக்களும் நாடும் பின்னோக்கி செல்லும்.
கிராமத்தையும் நகரத்தையும், நாட்டையும் யாரால் கட்டியெழுப்ப முடியும்? ஜனாதிபதி ரணிலை தவிரவேறு எவராலும் இந்த நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது.
அனுபவம் இல்லாதவர்களால் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது. இந்நாட்டின் நிலைமைக்கு ஏற்ப சர்வதேச சமூகத்துடன் தொடர்பு வைத்திருக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை தவிர வேறு யாராலும் இந்த நாட்டை காப்பாற்ற முடியாது.
அதனால்தான் பாராளுமன்றத்தில் அதிக எண்ணிக்கையிலான எம்.பி.க்கள் அவருடன் இணைந்துள்ளனர்.’ என பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா தெரிவித்துள்ளார்