நடிகை மேகா ஆகாஷுக்கு நிச்சயதார்த்தம்!

நடிகை மேகா ஆகாஷுக்கு நிச்சயதார்த்தம்!

கடந்த 2019-ம் ஆண்டு வெளியான பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பிரபலமானவர் நடிகை மேகா ஆகாஷ்.

இதனைத்தொடர்ந்து, தனுஷுடன் என்னை நோக்கி பாயும் தோட்டா, சிம்புவுக்கு ஜோடியாக வந்தா ராஜாவா தான் வருவேன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் நேற்று சாய் விஷ்ணு என்பவருடன் நடிகை மேகா ஆகாஷுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.

இது தொடர்பான புகைப்படங்களை நடிகை மேகா ஆகாஷ் தனது சமூக வளைத்தலத்தில் பகிர்ந்ததை தொடர்ந்து, ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )