வெள்ளப்பெருக்கால் 1 லட்சம் வீடுகள் சேதம்

வெள்ளப்பெருக்கால் 1 லட்சம் வீடுகள் சேதம்

தென் அமெரிக்க நாடான பிரேசிலில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள பல நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.

இந்த வெள்ளப்பெருக்கில் சுமார் 1 லட்சம் வீடுகள் சேதமடைந்து உள்ளன. இதனால் வெள்ளப்பெருக்கு மற்றும் கட்டிட இடிபாடுகளில் சிக்கி இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

மேலும் ஆயிரக்கணக்கான கால்நடைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இந்த வெள்ளப்பெருக்கால் சுமார் 15 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.எனவே அவர்கள் தங்குவதற்காக பல தற்காலிக நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

இதனால் வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் மக்கள் மீட்கப்பட்டு அங்கு தங்க வைக்கப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி உள்ளது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )