பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் அர்ச்சுனா இராமநாதனின் பதவி இழக்கப்படுமா ?

பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் அர்ச்சுனா இராமநாதனின் பதவி இழக்கப்படுமா ?

எதிர்க்கட்சித் தலைவர் ஆசனத்தில் அமர்ந்து பாராளுமன்ற அதிகாரி ஒருவருடன் வார்த்தைப் பரிமாற்றத்தில் ஈடுபட்ட யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன் பதவி பறிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மருத்துவ நிபுணராக கடமையாற்றிய போதே அவர் பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்தமையே இதற்குக் காரணம்.

இந்த நாட்டின் சட்டத்தின் பிரகாரம் அரசாங்கத்தில் பணியாற்றும் போது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்க முடியாது.

இந்நிலைமையால் அவர் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வகிப்பது சிக்கலாக மாறியுள்ளதாகவும் இது சட்ட சட்டத்தின் முன் சவாலுக்கு உட்படுத்தப்படவுள்ளதாகவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கு முன்னர் ராஜித சேனாரத்னவும் தனது தொழிலை விட்டு விலகாமல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வகித்ததற்காக பதவியில் இருந்து நீக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )