ருக்மன் சேனாநாயக்க காலமானார்

ருக்மன் சேனாநாயக்க காலமானார்

இலங்கையின் முதலாவது பிரதமரான டி.எஸ்.சேனாநாயக்கவின் பேரனும், ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த உறுப்பினருமான முன்னாள் அமைச்சர் ருக்மன் சேனாநாயக்க இன்று (24) காலமானார்.

1948 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 21 ஆம் திகதி பிறந்த ருக்மன் சேனாநாயக்க அவர்கள் இறக்கும் போது அவருக்கு வயது 76.

ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி 1973 ஆம் ஆண்டு முதல் தடவையாக பாராளுமன்றத்திற்கு தெரிவான ருக்மன் சேனாநாயக்க 2004 ஆம் ஆண்டு வரை அவ்வப்போது பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தினார்.

ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தில் சுற்றாடல் அமைச்சராகவும் பதவி வகித்த அவர், 2007 இல் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராகவும் நியமிக்கப்பட்டார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )