அதிக வெப்பத்தால் மேலும் ஒருவர் உயிரிழப்பு

அதிக வெப்பத்தால் மேலும் ஒருவர் உயிரிழப்பு

அதிக வெப்பம் காரணமாக யாழ்ப்பாணம் – புன்னாலைக்கட்டுவன் பகுதியில் புதன்கிழமை (08) குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த சிவஞானம் ஜெயக்குமார் (வயது 45) என்பவர் ஆவார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர் சம்பவத்தினத்தன்று  மதியம் 1.45 மணியளவில் மதுபோதையில் இருந்ததை அவரது மகள் அவதானித்துள்ளார். பின்னர் 3.30 மணியளவில் அவர் வெயிலில், கீழே விழுந்து இருந்ததை அவதானித்துள்ளார். அருகில் சென்று பார்த்த வேளை அவர் உயிரிழந்து காணப்பட்டார்.

அவரது சடலம் மீட்கப்பட்டு தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு உடற்கூற்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

அவர் அதிக வெப்பம் காரணமாக உடலில் பத்துக்கும் மேற்பட்ட எரிகாயங்கள் ஏற்பட்டு உயிரிழந்ததாக பிரேத பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )