பிறப்பு சான்றிதழுக்கு பதிலாக இறப்பு சான்றிதழ் : மக்கள் விசனம்

பிறப்பு சான்றிதழுக்கு பதிலாக இறப்பு சான்றிதழ் : மக்கள் விசனம்

நுவரெலியா பிரதேச செயலாளர் அலுவலகத்தில் பிறப்பு சான்றிதழ் பத்திரம் பெறுவதற்காக செல்லும் பொதுமக்களுக்கு இறப்பு சான்றிதழ் பெறுவதற்காக வழங்கப்படும் விண்ணப்ப படிவம் வழங்கப்படுவதனால் தாம் அசௌகரியங்களுக்கு
முகங்கொடுக்க வேண்டிய நிலையேற்பட்டுள்ளதாக பொதுமக்கள் விஷனம்
வெளியிட்டுள்ளனர்

இந்நடவடிக்கை, ஒரு மாதத்திற்கும் மேலதிகமாக நடைபெற்று வருவதாக அம் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

நுவரெலியா பிரதேச அலுவலகத்தில் வழங்கப்பட்ட பிறப்பு சான்றிதழ் விண்ணப்ப
படிவத்தில் இறப்பு என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில் சிங்கள மொழியில் இறப்பு என குறிப்பிடப்பட்ட சொல்லை வெட்டி விட்டு அதற்குப் பதிலாக ஆங்கில மொழியில் Birth என எழுதப்பட்டு காணப்படுகிறது.

இதனால் தமிழ் மொழி மாத்திரம் தெரிந்தவர்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்கவேண்டியுள்ளதா தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக பொறுப்பு கூற வேண்டிய அதிகாரியிடம் வினவியபோது இவ்வாறான நடவடிக்கை கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )