பாராளுமன்ற உறுப்பினராக கருணாரத்ன பரணவிதான சத்தியப்பிரமாணம்
பாராளுமன்ற உறுப்பினராக கருணாரத்ன பரணவிதான இன்று (03) பாராளுமன்றத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள இராஜினமா செய்த நிலையில் அவரது இடத்துக்கு வெற்றிடம் ஏற்பட்டது.
இதனையடுத்து, அத்துகோரளவுக்கு அடுத்தபடியாக இரத்தினபுரி மாவட்டத்தில் இருந்து அதிக வாக்குகளைப் பெற்றவர் பரணவிதான அந்த இடத்துக்கு தெரிவு செய்யப்பட்டார்.
தலதா அத்துகோரள கடந்த மாதம் 21 ஆம் திகதி பாராளுமன்றத்தில் அறிக்கையொன்றை விடுத்து இராஜினாமா செய்திருந்தார்.