காட்டு விலங்குகளாக இருந்த நாய்கள் மனிதனின் செல்லப் பிராணியானது எப்படி?
அனைத்து நாய்களும் அழிந்துபோன ஒற்றை ஓநாய் இனத்திலிருந்தே தோன்றியதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஓநாய்கள் உணவுக்காக அலைந்து கொண்டிருந்த போது மனிதனால் பழக்கப்படுத்தப்பட்டு அவைகள் வேட்டையாடவும் மற்றும் காவலுக்காகவும் சேவை செய்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
உலகமெங்கும் பல இடங்களில் நாய்களைப் பழக்கப்படுத்தும் நிகழ்வுகள் நடந்திருக்கலாம் எனவும் ஆனால் அந்த நாய்கள் இன்றைய நாய்களுக்கு அதிகமாக டி.என்.ஏ-க்களைப் பங்களிக்கவில்லை எனவும் தெரியவருகிறது.
ஆரம்ப நாய் வளர்ப்பு எப்போது அல்லது எங்கு நடந்தது என்பது தெளிவாகத் தெரியவில்லை என்று டாக்டர் ஸ்கோக்லண்ட் கூறியுள்ளார்.
“6,000 ஆண்டுகளுக்கு முன்பு பூனைகள் போன்ற பல விலங்குகள் நம் செல்லப்பிராணிகளாக மாறியிருக்கலாம் அவை வளர்க்கப்பட்டதன் துவக்கத்தை, மத்திய கிழக்கு போன்ற விவசாயம் தோன்றிய இடத்தொடு நாம் தொடர்புபடுத்தலாம்“.
“ஆனால் நாய்களைப் பொருத்தவரை மனிதனின் ஆரம்ப காலத்திலயே அதன் துவக்கம் எங்கு வேண்டுமானாலும் இடம் பெற்றிருக்கலாம் சைபீரியன் குளிர் பிரதேசம், சூடான கிழக்குப் பிரதேசம், தென்-கிழக்கு ஆசியா என இப்படி பல இடங்களில் அது நடந்திருக்கலாம்“ என பொன்டஸ் ஸ்கோக்லண்ட் கூறுகிறார்.