மோடியின் கட்சியில் இணைந்த பிரபல இந்திய கிரிக்கட் வீரர்

மோடியின் கட்சியில் இணைந்த பிரபல இந்திய கிரிக்கட் வீரர்

இந்திய கிரிக்கெட் அணியின் பிரபல வீரரான ரவீந்திர ஜடேஜா பாரதிய ஜனதாக்கட்சியில் இணைந்துள்ளார்.

ரவீந்திர ஜடேஜாவின் கட்சி உறுப்பினர் அடையாள அட்டையை அவரது மனைவி ரிவாபா ஜடேஜா எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளதுடன் ரிவாபா ஜடேஜா குஜராத்தில் பாரதிய ஜனதாக்கட்சியின் சார்பில் சட்டமன்ற உறுப்பினராக பதவி வகிக்கும் நிலையிலேயே ஜடேஜா கட்சியில் இணைந்துள்ளார்..

கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற இருபதுக்கு 20 உலகக்கிண்ண இறுதிப்போட்டியில், தென் ஆப்பிரிகாவை வீழ்த்தி இந்திய அணி செம்பியன் பட்டத்தை வென்றதன் பின்னர், ஜடேஜா தாம், இருபதுக்கு 20 சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கதாகும். 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )