பங்களாதேஷ் வீரருக்கு அபராதம் !
நேபாள வீரருடன் மோதலில் ஈடுபட்ட பங்களாதேஷ் வேகப்பந்து வீச்சாளர் தன்சிம் ஹசனுக்கு போட்டிக் கட்டணத்தில் 15 வீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நேபாளத்திற்கு எதிராக கடந்த 17ஆம் திகதி நடைபெற்ற இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரின் போட்டியின் போது பங்களாதேஷ் வேகப்பந்து வீச்சாளர் தன்சிம் ஹசன் நேபாள அணித் தலைவர் ரோஹித் போடெலுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தார்.
இதன்போது நடுவர் தலையிட்டு இருவரையும் பிரித்து விட்டார்.
எனினும் போட்டிக்குப் இது தொடர்பில் பவுடல் தெரிவிக்கையில்,
‘எம்மிடையே எதுவும் நடக்கவில்லை. அவர் பந்தை அடிக்கும்படி என்னிடம் கூறினார், பதிலுக்கு சென்று பந்தைப் போடும்படி நான் கூறினேன். வேறு ஒன்றும் நடக்கவில்லை’ என்றார்.
இந்நிலையில் பங்களாதேஷ் வேகப்பந்து வீச்சாளர் தன்சிம் ஹசன் ஐ.சி.சி. நடத்தை விதி 2.12 பிரிவை மீறியதாக ஐ.சி.சி. தெரிவித்துள்ளது.
தவறை ஒப்புக்கொண்ட தன்சிம், ஐ.சி.சி. போட்டி மத்தியஸ்தரின் அபராதத்தையும் ஏற்றுக்கொண்டுள்ளார்.
மேலும் , கடந்த 02 வருடங்களில் இவருடைய முதல் குற்றமாக இது பதிவாகியதால் அவருக்கு ஒரு தரமிறக்கல் புள்ளியும் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.