கமலா ஹாரிஸ் – டிரம்ப் நாளை நேரடி விவாதம்
.அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை ஜனாதிபதியான கமலா ஹாரிஸ், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் போட்டியிடுகிறார்கள்.
இந் நிலையில் கமலா ஹாரிஸ்-டிரம்ப் பங்கேற்கும் நேரடி விவாத நிகழ்ச்சி இலங்கை நேரப்படி நாளை (11) காலை 6.30 மணிக்கு நடக்கிறது. பென்சில்வேனியா மாகாணம் பிலடெல்பியாவில் நடக்கும் இந்த விவாத நிகழ்ச்சியை ஏ.பி.சி ஊடகம் ஏற்பாடு செய்துவுள்ளது.
விவாத நிகழ்ச்சியை ஏ.பி.சி தொகுப்பாளர்கள் டேவிட் முயர், லின்சி டேவிஸ் ஆகியோர் தொகுத்து வழங்குகிறார்கள். 90 நிமிட விவாதம் நடைபெறும். இடையில் 2 இடைவேளை விடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வேட்பாளரின் மைக்ரோபோனும் அவர்கள் பேசும் முறை மட்டுமே நேரலையில் இருக்கும். மற்ற வேட்பாளரின் நேரம் இருக்கும் போது அணைக்கப்படும் என்றும், எந்தவொரு தலைப்புகளும் கேள்விகளும் வேட்பாளர்களுடன் முன்கூட்டியே பகிரப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.