டிரம்ப் – கமலா ஹாரீஸ் விவாதத்துக்கான திகதி அறிவிப்பு
எதிர் வரும் நவம்பர் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் மாதம் நடைபெறவுள்ள நிலையில் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார்கள்.
இந்நிலையில் டிரம்ப்-கமலா ஹாரிஸ் இடையே நேரடி விவாத நிகழ்ச்சி அடுத்த மாதம் 10-ந்திகதி நடைபெறவுள்ளது என வெளிநாட்டு ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.
சொந்த கட்சியிலேயே எதிர்ப்பு கிளம்பியதையடுத்து தனது உடல்நிலையை காரணம் காட்டி ஜனாதிபதி தேர்தலில் இருந்து விலகுவதாக ஜோபைடன் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
CATEGORIES World News