விபத்தில் படுகாயமடைந்த வயோதிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
மன்னார்-தலைமன்னார் பிரதான வீதியில் புதன்கிழமை(06) இடம்பெற்ற விபத்தில் படுகாயம் அடைந்த வயோதிபர் ஒருவர் நேற்று (08) மாலை யாழ் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.
கடந்த புதன்கிழமை (06) மாலை பாடசாலை முடிவடைந்து தனது பேரனை துவிச்சக்கர வண்டியில் ஏற்றிக் கொண்டு வீடு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த 67 வயதுடைய வயோதிபர் மீது அவ் வீதியூடாக அதி வேகமாக பயணித்த கூலர் வாகனம் மோதி விபத்தை ஏற்படுத்தியது.
இதன் போது காயமடைந்த பேரனும்,வயோதிபரும் உடனடியாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு,மேலதிக சிகிச்சைக்காக யாழ் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.
இதன் போது நேற்று (08) 67 வயதுடைய வயோதிபர் சிகிச்சை பலனின்றி யாழ் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் ,கூலர் வாகனத்தின் சாரதியை கைது செய்த மன்னார் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
ரொசேரியன் லெம்பேட்