ஆரோக்கியமான நொறுக்குத் தீனிகள்

ஆரோக்கியமான நொறுக்குத் தீனிகள்

மாலைப் பொழுதை இனிமையாக்க சில நொறுக்குத் தீனிகள் உதவும்.

ஆனால், பஜ்ஜி , போண்டா போன்றவற்றை அடிக்கடி சாப்பிடாமல், சத்தான சில நொறுக்குத் தீனிகளையும் உண்ணலாம். அந்த வகையில் ஆரோக்கியமான நொறுக்குத் தீனிகள் சிலவற்றைப் பார்ப்போம்.

பழங்களை சிறு சிறு துண்டுகளாக வெட்டி, ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் சிறிதளவு உப்பு மற்றும் மிளகுத்தூள் கலந்து சாப்பிடலாம். வேகவைத்த சோள முத்துக்களுடன் சிறிதளவு உப்பு, மிளகுத்தூள், மசாலாத் தூள், பட்டர் சேர்த்து கலந்து சாப்பிடலாம்.

கொள்ளை சுத்தம் செய்து எண்ணெய் சேர்க்காமல் வறுத்து, சிறிதளவு உப்பு சேர்த்து சாப்பிடலாம். கொண்டைக் கடலையை வறுத்து, அதில் சிறிதளவு எலுமிச்சம் சாறு, மசாலாத் தூள், உப்பு போன்றவற்றை கலந்து சாப்பிடலாம்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )