தினமும் இரவு தாமதமாக உறங்குபவரா நீங்கள் ?

தினமும் இரவு தாமதமாக உறங்குபவரா நீங்கள் ?

இரவில் சீக்கிரமாக உறங்கச் சென்று அடுத்தநாள் அதிகாலையில் எழுந்துவிடுவது சிறந்தது என்று அனைவருக்கும் தெரியும். நாள் முழுவதும் தொழில் செய்துவிட்டு உடலுக்கு ஓய்வு கொடுக்கும் நேரம் தான் இரவு.

அந்த இரவு நேரத்திலும் கண்களுக்கும் மூளைக்கும் ஓய்வு கொடுக்காமல் தொடர்ந்தும் வேலை கொடுத்து வருகிறோம். இது தவறு என்று தெரிந்துமே சிலரால் விட முடியாத பழக்கமாகிவிட்டது.

நம்மில் பெரும்பாலானோர் மிகத் தாமதமாகவே உறங்கச் செல்கின்றனர். இந்த தாமதம் பல உடல் உபாதைகளுக்கு வழி வகுக்கும்.

இரவு நேரங்களில் தூக்கத்தை விட்டு, போர்வையை இழுத்துப் போர்த்திக்கொண்டு கையடக்கத் தொலைபேசியை உபயோகிப்பது அனைவரது வீட்டிலும் நடக்கும் காரியம்தான்.

இதன்படி, அமெரிக்காவிலுள்ள பல்கலைக்கழகமொன்றில் நடத்தப்பட்ட ஆய்வில்,நள்ளிரவு ஒரு மணிக்கு மேல் உறங்குபவர்களுக்கு மனநலம் சார்ந்த பிரச்சினைகள் வருவதாக தெரிய வந்துள்ளது.

அதாவது, சமனில்லாத ஹோர்மோன் சுரப்பு, நோய் எதிர்ப்பு சக்தி குறைதல், ஞாபக மறதி, கவனச்சிதறல் ஆகியவை ஏற்படுகின்றன.

அதுமட்டுமின்றி, நரம்பியல் சார்ந்த பிரச்சினைகள், குணாதிசயங்களில் மாற்றங்கள் ஆகியவையும் ஏற்படுகின்றன.

குறித்த ஆய்வானது சுமார் 74000 இளைஞர்களிடம் நடாத்தப்பட்டது.

அதுவே இரவில் சீக்கிரமாக உறங்கி, அதிகாலையில் எழும்புகிறவர்களின் மனநிலை நன்றாக இருந்ததும் தெரிய வந்துள்ளது.

தெரிந்தே நம் உடல் உபாதைகளுக்கு நாம் ஏன் வரவழைத்துக்கொள்ள வேண்டும்? எனவே இனியாவது இரவில் சீக்கிரமாக உறங்கச் செல்லப் பழகுவோம்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )