இரவில் தலைக்கு எண்ணெய் வைக்கலாமா ?

இரவில் தலைக்கு எண்ணெய் வைக்கலாமா ?

தலைக்கு எண்ணெய் தேய்ப்பது முடி வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். முடிக்கு எண்ணெய் தேய்க்காவிட்டால் முடி வறண்டு கொட்ட ஆரம்பிக்கும்.

அதேநேரத்தில் ஒரு சிலர் இரவு நேரத்தில் தலைக்கு எண்ணெய் தேய்ப்பது நல்லதல்ல என்று கூறுவார்கள். உண்மையில் இரவில் எண்ணெய் வைப்பது சரியானதா  ?

உண்மையில் இரவு நேரங்களில் தலைக்கு எண்ணெய் வைப்பதன் மூலம் முடிக்கு சிறந்த ஊட்டச்சத்து கிடைக்கிறது.

இரவு நேரத்தில் தேங்காய் எண்ணெய், ஒலிவ் எண்ணெய் போன்றவற்றை போட்டு, காலையில் ஷெம்பூ போட்டு கழுவினால், முடி பட்டுப்போன்று மாறிவிடும்.

மேலும் தலையில் எண்ணெய் தேய்த்தால் தலையில் இரத்த ஓட்டம் சீராகும்.

ஆனால், உணமையில் இரவு நேரத்தில் தலைக்கு எண்ணெய் தடவினால் முடி வளருமா என்பதற்கு சரியான பதில் இல்லை.

சில நேரங்களில் அதிகமாக தலைக்கு எண்ணெய் வைத்தால் அது சளி பிடிப்பதற்கு முக்கிய காரணமாக இருக்கும்.

எனவே எண்ணெயை அளவோடு வைப்பது சிறந்தது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )