இஞ்சியின் மருத்துவ குணங்கள்
காலை இஞ்சி, கடும் பகல் சுக்கு, மாலை கடுக்காய் என்கிறது, சித்த மருத்துவம்.
இஞ்சியை உணவில் சரியான அளவில் தினமும் உண்டு வந்தால் மூட்டு வலி முதல் புற்றுநோய் வரை எதுவும் வராது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இஞ்சி செரிமானத்தை மேம்படுத்துகிறது. அஜீரணம், புண்கள், மலச்சிக்கல் நீங்கும். குடல் சார்ந்த பாதிப்புகளில் குணம் கிடைக்கும்.
இஞ்சியில் காணப்படும் மருத்துவ குணங்களால், உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம் வலிமை பெறுகிறது. மூளையின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. இஞ்சி ஒரு இயற்கை வலி நிவாரணி. அழற்சி எதிர்ப்பு மற்றும் வலியை விளைவிக்கும் உடலில் உள்ள கழிவுகளை அகற்ற உதவுகிறது.
ரத்தம் கெட்டியாகி உறைவதை தடுக்கும் இயல்பையும் இஞ்சி கொண்டுள்ளது. தொடர்ந்து இஞ்சி உட்கொள்ள ரத்தம் கெட்டியாவது தடுக்கப்பட்டு மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது.
சில ஆய்வுகள் இஞ்சியை உட்கொள்வது உடல் எடையை குறைக்க உதவுகிறது என்று காட்டுகின்றன. இஞ்சி இன்சுலின் அளவை கட்டுப்படுத்துகிறது. வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. இதனால், உடல் எடை சீராக இருக்க உதவுகிறது.
இஞ்சியில் உள்ள சில வேதிப்பொருட்கள் உடல்தோலின் பொலிவை மேம்படுத்துகிறது. இதனால், தோலில் சுருக்கம் ஏற்படுவது தடுக்கப்படுகிறது. இளமை நீடிக்கிறது. மூட்டு தேய்மானம் தடுக்கப்பட்டு மூட்டு எந்த வயதிலும் வலிமையாக இருக்க உதவுகிறது என்று அந்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன.