அரசு ஊழியர்கள் வீட்டில் இருந்து பணிபுரிய உத்தரவு

அரசு ஊழியர்கள் வீட்டில் இருந்து பணிபுரிய உத்தரவு

டெல்லியில் காற்று மாசு மிகவும் மோசமான நிலையை அடைந்துள்ளது. அதனால் டெல்லி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், உயர் நீதிமன்றிலும் நேற்று காற்று மாசு பிரச்சினை எழுப்பப்பட்டது.

தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதி சஞ்சய் குமார் அடங்கிய அமர்வு கூடியவுடன், சுப்ரீம் கோர்ட்டு பார் அசோசியேசன் தலைவர் கபில் சிபல் உள்ளிட்ட வக்கீல்கள், டெல்லியில் காற்று மாசு அதிகமாகி வருவதால், அதை கையாள உடனடி நடவடிக்கைகள் எடுக்குமாறு கேட்டுக்கொண்டனர்.

இந்த சூழலில் டெல்லி காற்று மாசுபாடு கடுமையாக இருப்பதால் வீட்டில் இருந்தே வேலை, ஒற்றைப்படை, இரட்டைப்படை எண்கள் அடிப்படையில் வாகன இயக்கம் உள்ளிட்ட திட்டங்களை அமல்படுத்துவது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என டெல்லி அரசு அறிவித்துள்ளது.

தலைநகர் டெல்லியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் காற்றின் தரக்குறியீடு தொடர்ந்து 450-க்கும் மேல் உள்ளது.

இது காற்றின் தரம் மிகவும் மோசமாக இருப்பதை காட்டுகிறது. காற்று மாசு கடுமையாக இருப்பதால் அடர்ந்த புகை மூட்டம் நிலவுகிறது. பனிப் பொழிவும் அதிகமாக இருப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் டெல்லியில் காற்று மாசுபாடு எதிரொலியாக 50 சதவீத அரசு ஊழியர்கள் வீட்டில் இருந்து பணிபுரிய உத்தரவிடப்படுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )