முடி வளர்ச்சிக்கு ஊக்கம் அளிக்கும் ஆளி விதை
பெண்கள் பலருக்கும் இருக்கும் முக்கிய பிரச்சினைகளுள் ஒன்று முடி உதிர்தல். முடியை நீளமாகவும் அடர்த்தியாகவும் வளர்ப்பதற்கு என்னவெல்லாமோ செய்வோம்.
அந்த வகையில் ஆளி விதைகள் முடி வளர்ச்சிக்கு மிகவும் உகந்தது.
லினம் உசுடாடிசிமம் எனும் அறிவியல் பெயர் கொண்ட இந்த ஆளி விதைகளில் கொழுப்பு அமிலங்கள், ஒமேகா – 3, ஒட்சிசனேற்றங்கள், அமினோ அமிலங்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
ஆளி விதையில் 18 முதல் 24 சதவீதம் புரதம் உள்ளது. இது தலைமுடியின் வேர்க்கால்களின் ஆரோக்கியத்தை பராமரித்து முடி வளர்ச்சிக்கு உதவும்.
லிக்னொன்ஸ் எனப்படும் தாவர கலவை ஆளி விதையில் உள்ளது. இது சிறந்த ஒட்சிசனேற்ற பண்புகளைக் கொண்டுள்ளது. இது வேர்களை பலமாக்கும்.
இதிலுள்ள ஒமேகா – 3 கொழுப்பு அமிலங்கள் உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவும்.
மேலும் முடி வளர்ச்சிக்கு சரியான உறக்கம், சத்தான உணவு, முறையான கூந்தல் பராமரிப்பும் அவசியம்