கால் ஆணி எதனால் ஏற்படுகிறது ?
நம்மில் பலருக்கு ஏற்படும் பொதுவான பிரச்சினை என்னவென்றால், கால் ஆணிதான்.
இறந்த தோலின் கடினமான உருமாற்றம்தான் கால் ஆணி.
பொருந்தாத காலணிகளை அணிதல், அதிக உடல், கரடுமுரடான வீதியில் அதிக நேரம் நடத்தல், உயரமான ஹீல்ஸ்களை அணிந்துகொண்டு அதிகப்படியான சுமையைத் தூக்குதல், கடினமான உடற்பயிற்சி போன்றவற்றால் இந்த கால் ஆண் பிரச்சினை ஏற்படலாம்.
கால் ஆணி வந்தவுடன் அதனை எப்படியாவது நீக்க வேண்டும் என்பதற்காக கத்தி, ப்ளேட் போன்றவற்றைக் கொண்டு சுரண்டி எடுப்போம்.
ஆனால் இவ்வாறு செய்வது நல்லதல்ல.
வெள்ளைப்பூண்டை பேஸ்ட்டாக அரைத்து கால் ஆணி இருக்கும் இடத்தில் கட்டி வைக்க வேண்டும். இவ்வாறு செய்தால் அதிலிருக்கும் ஆண்டிஆக்ஸிடன்ட் அதனைக் குணப்படுத்தும்.
சில நேரங்களில் ஒரு சிலருக்கு அறுவை சிகிச்சையும் தேவைப்படலாம்.
கால் ஆணி தானே என அலட்சியமாக இருக்காமல் மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெறுவது நல்லது.