கட்டுப்பாட்டு விலையில் அரிசி வழங்க முடியாது

கட்டுப்பாட்டு விலையில் அரிசி வழங்க முடியாது

கட்டுப்பாட்டு விலையில் அரிசி வழங்க முற்பட்டால் வியாபாரம் முற்றாக
வீழ்ச்சியடையலாம் என சிறிய மற்றும் நடுத்தர அரிசி உற்பத்தியாளர்கள்
மற்றும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

கட்டுப்பாட்டு விலையில் அரசி வழங்குவதாக அரிசி ஆலை உரிமையாளர் டட்லி
சிறிசேன தெரிவித்த கருத்து தொடர்பில், மரதகஹமுலவில் நேற்று (29) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சிறிய மற்றும் நடுத்தர அரிசி உற்பத்தியாளர்கள்
சங்கத்தின் முன்னாள் தலைவரும் மரதகஹமுல அரிசி வியாபாரிகள் சங்கத் தலைவர்
பி.கே.ரஞ்சித் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், தற்போதைய நிலையில்,
நெல் கிலோ ஒன்றுக்கு 130 ரூபாய் தொடக்கம் 132 ரூபாய் வரையில் விலையில் குறிப்பிடப்பட்டுள்ளதால் கட்டுப்பாட்டு விலையில் அரிசி வழங்குவதற்கான
சாத்தியக்கூறுகள் இல்லை. இம்முறை சிறிய வியாபாரிகள் ஒன்பது வீத வட்டிக்குப் பணம் வாங்கியே நெல் கொள்வனவு செய்துள்ளனர்.

நிலைமை இவ்வாறு இருக்கையில் சிறு ஆலை உரிமையாளர்கள் கட்டுப்பாட்டு விலையில் அரிசி வழங்குவது என்பது அவர்களால் அதைத் தாங்கிக்கொள்ள முடியாத காரணியாகும்.

டட்லி சிறிசேன இது தொடர்பில் என்னிடம் தெரிவித்தபோது எங்களால் அவ்வாறு செய்ய முடியாது என்று கூறினேன். இந்த நஷ்டத்தை ஜனவரி வரை தாங்கிக்கொள்ள சொல்லி விட்டார். ஆனால், சிறிய வியாபாரிகளால் எவ்வாறு செய்வது?

வியாபாரிகளைப் பாதுகாக்கும் அதே வேளையில் கட்டுப்பாட்டு விலையில் அரிசி வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட வேண்டும், அது தொடர்பில் நாங்கள் நீண்ட
காலமாகக் கூறி வருகிறோம். இவ்வாறான குறுகிய கால தீர்வை வழங்காமல் நீண்ட கால வேலைத்திட்டத்தின் ஊடாக கட்டுப்பாட்டு விலையில் அரிசியை வழங்குவதற்கு
வழிவகை செய்யுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கின்றோம்.

அவ்வாறு இல்லாவிட்டால் சிறிய மற்றும் நடுத்தர வியாபாரிகளின் அரிசி
ஆலைகள் வங்கிகளுக்கு உரித்தாக்கி விடும் என்று ரஞ்சித் வலியுறுத்தியுள்ளார

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )